பொியகுளத்தில் கொரோனா தடுப்பு பணி
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் கொரொ ரானா வைரஸ் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளம் நகராட்சிக்குத் தேவையான கிருமி நாசினி தெளிக்கும் நவீன இயந்திரத்திரத்தையும், அங்கு பணிபுரியும், தூய்மைப் பணியாளர்களுக்கு 4, இலட்சம் முகக் கவசங்கள் வழங்கினார்,
இந்நிகழ்ச்சியில், கொரொனா வைரஸ் எதிர்ப்புப் போரில் செயல்பட இருப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப .இரவீந்திரநாத் குமார், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர், பல்லவி பல்தேவ், தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, சார் ஆட்சியர் சினேகா, பெரியகுளம், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை, இணை இயக்குநர் இலட்சுமணன், மருத்துவ மனைக் கண்காணிப்பாளர் குமார், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், நகர் நல அலுவலர், 'மருந்துவர் தினேஷ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, அலெக்சாண்டர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான சுகாதாரம், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும், தூய்மைப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.இறுதியாக கிருமிநாசினி தெளிக்கும் நவீன இயந்திரத்தை இயக்கி வைத்தார்
தேனி மாவட்ட செய்திக்காக
அ.வெள்ளைச்சாமி
9442890100