கொரோனாவை விரட்ட அதிரடி!வேகமெடுக்கும் தமிழக அரசு

கொரோனாவை விரட்ட அதிரடி!வேகமெடுக்கும் தமிழக அரசு



தமிழகத்தில், கொரோனாவை விரட்ட, அரசின் அதிரடி நடவடிக்கைகள், வேகமெடுக்க துவங்கி உள்ளன. பாரம்பரிய இயற்கை மருத்துவமான, நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரை, மக்களுக்கு வழங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க, கட்டுப்பாட்டு பகுதிகளில், போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில், சில தொழில்களை துவங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், நோய் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை, அதிகரித்து வருவது, மக்களிடம் கவலையை ஏற்படுத்தியது. அதை தடு்பபதற்கு அரசு எவ்வித முன் எச்சாிக்கை நடவடிக்கையும் எடுக்க வில்லை,


ஜெயலலிதா முதல்வராக இருந்த போது  டெங்கு காய்ச்சல் வந்த போது  அதை தடு்பபதற்காக அலோபதி மருத்துவத்தை மட்டும் நம்பியிறாமல் சித்த மருத்துவா்களின் ஆலோசனையின் போில்  நிலவேம்பு கசாயத்தை வழங்கு ெடங்கு கா்யச்சலை முற்றிலும் ஒழித்தாா், அதேப்போல் கொரோனாவை அழிப்பதற்கு கபசூர குடிநீா் வழங்க வேண்டும் என்று பல நாட்களாக தமிழக சித்த மருத்துவா்கள் கோாிக்கை வைத்து வந்தனா் அதைத் தொடர்ந்து, அரசு தன் நடைமுறையில் மாற்றம் செய்ததுடன், பல அதிரடி நடவடிக்கைகளை துவக்கி உள்ளது.


'ஆரோக்கியம்'


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளவும், சிகிச்சைக்கு பின், உடல் நலத்தை பேணவும், நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் சூரண பொட்டலங்களை வழங்கும், 'ஆரோக்கியம்' என்ற சிறப்பு திட்டத்தை, முதல்வர், இ.பி.எஸ்., இன்று துவக்கி வைத்தார்.

கேரளாவில், ஆயுர்வேத மருத்துவமுறையை பின்பற்றி, கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது போல, தமிழகத்திலும், கொரோனா நோயை கட்டுப்படுத்த, இந்திய மருத்துவ முறைகளை பின்பற்ற, தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்தது.அதன்படி, தமிழகத்தில், 11 மருத்துவ வல்லுனர்கள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த, மூத்த இந்திய மருத்துவர்கள், மூத்த அலோபதி மருத்துவர்கள் இடம் பெற்றனர்.


கண்காணிப்பு


இவர்கள், 'ஆரோக்கியம்' என்ற சிறப்பு திட்டத்தை, அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதை ஏற்று, தமிழக மக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும், சிகிச்சைக்கு பின், உடல் நலத்தை பேணவும், நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


மாநிலத்தில், நோய் தொற்று ஏற்பட்ட பகுதி கள், 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து, யாரும் வெளியில் செல்ல முடியாதபடியும், உள்ளே வர முடியாதபடியும், கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.பொது இடங்களில், மக்கள் நடமாட்டத்தை குறைக்க, முக்கிய சாலைகளில், போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டு உள்ளது. சென்னையின் பிரதான சாலையான, அண்ணா சாலையில், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.சென்னை, வேளச்சேரியில், பிரதான மேம்பாலத்தில், தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது; இருசக்கர வாகனம் உட்பட, எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.


இதேபோல், மாநிலம் முழுவதும், பிரதான சாலைகளில், போக்குவரத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், பாதிப்பு இல்லாத பகுதிகளில், சில தொழில்களை துவங்க, அனுமதி அளிக்கும்படி, மாநில பேரிடர் ஆணையம், அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. கட்டுப்பாடு பகுதிகள் தவிர்த்து, மற்ற பகுதிகளில், தேசிய ஊரக வேலை திட்டம், நீர்ப் பாசன திட்டம், ஏரிகள், கால்வாய்கள் துார்வாரும் பணிகள், மேற்கொள்ள தடையில்லை. அணை பாதுகாப்பு மற்றும் கட்டுமான பணிகள், மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிகள், சாலை, பாலங்கள் அமைத்தல், குடிநீர் வழங்கல், கழிவுநீரற்றல் ஆகியவற்றுக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


செங்கல் சூளை செயல்படவும், மின்சார பணிகள் மேற்கொள்ளவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவீதத்திற்கு மிகாத பணியாளர்களைக் கொண்டு செயல்படலாம்.இவற்றுக்கு அனுமதி அளிப்பதற்கு முன், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை, மாவட்ட நிர்வாகம், உறுதி செய்து கொள்ள வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள், மாற்று திறனாளிகள், சிறப்பு குழந்கைள், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்கள் செயல்படலாம். முதியோரை கவனிக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், ரொட்டி, பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மாவு, பருப்பு மில்கள் செயல்படலாம். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சிப் பணிகள் தொடரலாம்.சுத்திகரிப்பு நிறுவனங்கள், இரும்பு உருக்காலைகள், சிமென்ட், சர்க்கரை, ரசாயனம், பெயின்ட், உரம், கண்ணாடி, டயர், காகிதம் உற்பத்தி ஆலைகள், குறைந்த பணியாளர்களுடன் செயல்பட, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இப்பணிகள் அனைத்தையும், கட்டுப்பாடு விதிக்கப்படாத, 388 வட்டாரங்களில் துவக்கலாம்; கட்டுப்பாட்டு பகுதியில் அனுமதி கிடையாது.


‛ஆரோக்கியம்' சிறப்பு திட்டம்


சென்னை, தலைமை செயலகத்தில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையால் தயாரிக்கப்பட்டுள்ள, கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் சூரணப் பொட்டலங்களை, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாருக்கு, முதல்வர் வழங்கினார்.சென்னை மாநகரில், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு, கபசுர குடிநீர் சூரணப் பொட்டலங்கள் வழங்கப்படும்.


இதை வினியோகிக்கும் போது, சம்பந்தப்பட்ட அலுவலர்களும், பயனாளிகளும், சமூக இடைவெளியை, முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த சிறப்பு திட்டத்தின் வழிமுறைகள், கொரோனா நோய்க்கான சிகிச்சை அல்ல எனவும், பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மருத்துவ ரீதியாக, ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து வசதி!


மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க, அரசு அனுமதி அளித்துள்ளது. அவர்கள், எப்படி பணிக்கு வருவர் என்ற, கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து, பொதுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‛ஏற்கனவே, அரசு அலுவலகங்கள், குறைந்த பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், குறிப்பிட்ட இடங்களிலிருந்து, பணியாளர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள், பணிக்கு வர வேண்டியதில்லை' என்றனர்.


கபசுர குடிநீர் எவ்வளவு குடிக்கலாம்?


* ஒருவருக்கு என்றால், 5 கிராம் பொடியை, 250 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து, 50 மி.லி.,யாக சுண்டக்காய்ச்ச வேண்டும். அதை வடிகட்டி, இளம் சூட்டில், காலை நேர உணவுக்கு முன் பருக வேண்டும். பெரியவர்களுக்கு, 50 மில்லி, சிறியவர்களுக்கு, 30 மில்லி, குழந்தைகளுக்கு, 20 மில்லி வரை கொடுக்கலாம்


*தினமும் காலை, மாலை என, ஐந்து நாட்களுக்கு பருகிவிட்டு, அதன் பின், வாரம் ஒரு முறை அல்லது இரு முறை பருகினால் போதுமானது. இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
*கபசுர குடிநீர் கிடைக்காவிட்டால், நிலவேம்பு கஷாயத்தை, இதே முறையில் தயாரித்து பருகலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நிலவேம்பு, கபசுர குடிநீர் இரண்டையும், ஒரே நேரத்தில் குடிக்கக்கூடாது என்கிறார், சித்த மருத்துவர் வீரபாபு.


Popular posts