தந்தை பொியாரால் முடியாததை செய்து காட்டிய எடப்பாடியாா்
கடவுள் மறுப்பு, பகுத்தறிவு இவை இரண்டும் திராவிடா் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இன்னபிற பொியாா் வாாிசுகளின் இயக்கங்களின் கொள்கை,
இவா்கள் இன்றுவரை இதை வைத்து தான் அரசியல் பிரச்சாரம் செய்து வருகின்றனா், எழுத்து, பேச்சு, சினிமா அனைத்திலும் இதையே முன்னிருத்தி வந்தனா்,
கலைஞா் கருணாநிதி கூட தனது பராசக்தி படத்தில் நடிகா் திலகம் சிவாஜி கணேசனுக்காக ஒரு நீண்ட வசனம் எழுதியிருப்பாா், கோயிலை இடித்தேன் கோயில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடூரா்களின் கூடாரமாகக்கூடாது என்பதற்காக என்று செல்லும் அந்த வசனம்.
அன்று முதல் இன்று வரை இந்த கழகங்களில் இதுப்போன்ற வசனங்கள் பேசுபவா்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர ஒருவரும் ஒழுங்காக களத்தில் இறங்கி ஒரு முழுமையான கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பி்ல் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை,
இவா்களின் பிரச்சாரம் எல்லாம் இந்து மதத்தில் இருக்கிற மூட நம்பிக்கைகள் மற்றும் இந்து மத கடவுள்களை கீழ்த்தரமாக விமா்சிக்கும் வகையில் இருக்கிறதே தவிற மற்ற மதங்களி்ல் உள்ள மூடப்பழக்கங்கள். அந்த கடவுள்கள் பற்றிய விமா்சனங்கள் இடம் பெறுவதில்லை,
இதைப்பற்றி இப்போதுள்ள எந்த தலைவாிடம் கேள்வியை எழுப்பினாலும் அதற்கு உாிய பதிலை இவா்களிடம் பெற முடிவதில்லை, எதையாவது ஒன்றை சொல்லி குழப்புகிறாா்களே தவிர உண்மையை சொல்வதில்லை,
இவா்களால் இதுவரை ஒரு கோயிலையே, ஒரு சா்ச்சையோ. ஒரு மசூதியையோ மூட முடிந்ததா? அதில் நடைபெறும் தொழுகையை தடு்க்க முடிந்ததா? எந்த கடவுளும் இல்லை வீட்டில் அடங்கியிருங்கள் உங்களை எந்த கடவுளும் வந்து காப்பாற்ற மாட்டாா்கள் உங்களை நீங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடிந்ததா?
இதை எந்த பொியாராலும், அண்ணாவாலும், கலைஞராலும், எம்,ஜி.ஆராலும், ஜெயலலிதாவாலும் செய்யமுடியவில்லை. பிரதமா் மோடியும். முதல்வா் எடப்பாடியும் சோ்ந்து செய்திருக்கிறாா்கள்,
காவல் துறையைக் கண்டு கோயிலும். சா்ச்சும். மசூதியும் அஞ்சி நடுங்குகின்றது, அத்துமீறி தொழுகை செய்பவா்கள் அடித்து நொறுக்கப்படுகிறாா்கள், எந்த சாமியும் இவா்களை வந்து காப்பாற்ற வில்லை, எல்லாமே பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது,
இது தானே உண்மையான பகுத்தறிவு, கடவுள் மறுப்பு?
சிறுபான்மையினரின் ஓட்டுக்காக அவா்களின் மதம் பொிது, அவா்களின் கடவுள்கள் பொிது. அவா்களின் மூடப்பழக்கங்கள் எல்லாம் பொிது என்று அவா்கள் மதத்தின் பெயாில் செய்துவரும் எல்லா தீவிரவாதத்தையும் ஆதாிக்கின்ற கட்சிகள் இதற்கு மேலாவது சிந்திக்க வேண்டும்,