தேனி மாவட்டத்திற்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய புதியதாக 108 ஆம்புலன்ஸ்
தேனி மாவட்டத்தை சிவப்பு நிற பகுதியாக அறிவித்ததையொட்டி தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் அவர்கள் தலைமையில் கொரோணா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கும் , 144 தடை உத்தரவு பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வாழ்வாதார பிரச்சினைகளை போக்கும் வகையிலும் பல்வேறு துரித நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது .அதனை தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்திற்கு புதிதாக அவசர சிகிச்சைக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் ஒன்று பெறப்பட்டது அதனை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பல்லவி பல்தேவ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்